

சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகளை மற்றொரு நாளுக்குத் தள்ளிவைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இளநிலை மற்றும் முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளில் வெவ்வேறு பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு 19-ந் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு வருகிற மார்ச் மாதம் 5, 6, 9 மற்றும் 11-ந் தேதிகளில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவித்து இருக்கிறது.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.annauniv.edu என்ற அண்ணா பல்கலைக்கழக இணையதளத்துக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம். இதுதவிர செமஸ்டர் தேர்வுக்கு பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (சனிக்கிழமை) பதிவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.