நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் கலந்துரையாடல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் கலந்துரையாடல்
Published on

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்தபடி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி, 27 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோருடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அப்போது, தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிவதோடு வருகிற 14-ந் தேதி வெளியிடப்பட உள்ள ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலை, தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும். உரிய காலத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தயாரித்து வெளியிட வேண்டும். மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தேர்தல் தொடர்பான புள்ளி விவரங்களை பதிவேற்றம் செய்வது, அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவின கணக்குகளை பெற்று சரிபார்க்க வேண்டும், என்றும் தேர்தல் தொடர்பான வழக்குகளுக்கு கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இல.சுப்பிரமணியன் மற்றும் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com