

சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோரால் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாகவும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் வழங்குதல், காலி பதவியிடங்களாக உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகிய பதவியிடங்களை விரைவாக நிரப்புதல், தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.