நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 10ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தி.மு.க.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 10-ம் கட்ட பட்டியல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரேகட்டமாக தேர்தல், பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி நாளையோடு (4-ம் தேதி) நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், திமுக தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 10-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த 10-ம் கட்ட பட்டியலில் நாகர்கோவில், திண்டுக்கல் மாநகராட்சிகளுக்கான திமுக வேட்பாளர்களும், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, உள்ளிட்ட நகராட்சிகளுக்கான திமுக வேட்பாளர்களும், நாகை தெற்கு, நாகை வடக்கு, புதுக்கோட்டை வடக்கு, கோவை தெற்கு, இராமநாதபுரம் மாவட்டம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு, தேனி தெற்கு, அரியலூர் மாவட்ட திமுக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com