நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 19-ந்தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து 19-ந்தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 19-ந்தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை
Published on

சென்னை,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சாதாரண தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்டரங்கில் அன்றைய தினம் பகல் 11.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com