நெல்லையில் யூரியா தட்டுப்பாடு - விவசாயிகள் வேதனை

கூடுதல் இடுபொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
நெல்லையில் யூரியா தட்டுப்பாடு - விவசாயிகள் வேதனை
Published on

சென்னை,

நெல்லை மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்கள் போதிய அளவு இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் விவசாய சங்கத்தினர் மனுவை அளித்துள்ளனர்.

அந்த மனுவில், தனியார் நிறுவனங்களில் உரங்களை வாங்கச் சென்றால், கூடுதல் இடுபொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே யூரியா தட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com