பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தல்
Published on

ஜெயங்கொண்டம்:

தமிழ்நாடு இந்திய தொழிற்சங்க மையத்தின் 15-வது மாநில மாநாடு, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி சி.கோவிந்தராஜன் நினைவு ஜோதி பிரசார பயண வாகனத்திற்கு ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் தமிழ்நாடு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை பாதியாக குறைக்க வேண்டும். முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தக் கூடாது. நேரடியாக உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாகுபாடு இன்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கட்டுமானம், ஆட்டோ, தையல் உள்ளிட்ட அனைத்து நலவாரிய பணப் பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்கக்கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் தெரிவித்து இந்திய தொழிற்சங்க மைய நிர்வாகிகள் பேசினர். இதில் மாநிலத் துணைத் தலைவர் கருப்பையா, விழுப்புரம் மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com