கும்பகோணம்-ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலத்திற்கு ரெயில் பாதை அமைக்க வலியுறுத்தல்

கும்பகோணம்-ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலத்திற்கு ரெயில் பாதை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
கும்பகோணம்-ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலத்திற்கு ரெயில் பாதை அமைக்க வலியுறுத்தல்
Published on

ஜெயங்கொண்டம் 

கும்பகோணம்- ஜெயங்கொண்டம், விருத்தாசலம் தொடர்வண்டி வேண்டுவோர் கூட்டமைப்பு உருவாக்குதல் கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வக்கீல் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்ட சோழபுரம் மண்டலம் வரலாற்று சிறப்புமிக்கதாய் இருந்தாலும் பொருளாதார வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பிலும் பின் தங்கி உள்ளது. தொடர்வண்டி வசதி இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதால் கும்பகோணம்-ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலம் ரயில் நிலையத்தை இணைக்க ரயில் பாதை அமைக்க மத்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டு இயக்கம் நடத்துவதற்கான ஒரு அமைப்பை உருவாக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக திருவள்ளுவர் ஞானமன்ற நிறுவனர் பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக வக்கீல் பழனிமுத்துவும், உறுப்பினர்களாக பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த அமைப்பின் வாயிலாக தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வக்கீல் முருகன், பரப்பிரம்மம் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வேல்முருகன், அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com