தஞ்சையில் உறியடி திருவிழா

தஞ்சையில் உறியடி திருவிழா
தஞ்சையில் உறியடி திருவிழா
Published on

தஞ்சையில் கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி உறியடி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்கு மரம் ஏறினர்.

உறியடி திருவிழா

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தஞ்சை மேலவீதியில் உறியடி திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 22-வது ஆண்டாக உறியடி திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள், இசை நிகழ்ச்சிகள், பூச்சொரிதல், கோபூஜை ஆகியவையும் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியான உறியடி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

வழுக்கு மரம் ஏறுதல்

அதைத்தொடர்ந்து வழுக்கு மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டதையடுத்து உறியடி திருவிழா தொடங்கியது. இதையடுத்து இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏறினர். அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

இறுதியில் ஒரு வாலிபர் வழுக்குமரம் ஏறினார். இதனை திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர். முன்னதாக கிருஷ்ணன் 4 வீதிகளிலும் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை உறியடி குழு தலைவர் கோபால், செயலாளர் சரத்யாதவ் மற்றும் யாதவ கண்ணன் பக்த கோடிகள் மற்றும் தஞ்சை ராஜாக்கோட்டை யாதவர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com