உறியடி உற்சவம் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி உற்சவம் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
உறியடி உற்சவம் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் உள்ள ஸ்ரீநவநீத கிருஷ்ணர் கோவிலில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி உற்சவம் மற்றும் வழுக்குமரம் ஏறுதல், கோலாட்டம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீநவநீத கிருஷ்ணர் மலர்களால் அலங்காக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

அப்போது கடை வீதி, கவரைத்தெரு, சித்தேரி தெரு ஆகிய பகுதிகளில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உறியடி உற்சவம் நடைபெற்றது. அதேபோல் கிராமச்சாவடி தெருவில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டு வழுக்கு மரம் ஏறினர். அவர்கள் மீது மஞ்சள்நீரை பக்தர்கள் தெளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com