ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உறியடி உற்சவம்; இன்று நடக்கிறது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உறியடி உற்சவம் இன்று நடக்கிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உறியடி உற்சவம்; இன்று நடக்கிறது
Published on

ஸ்ரீரங்கம்:

கிருஷ்ண ஜெயந்தி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ணர் ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி கிருஷ்ண ஜெயந்தி, உறியடி உற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 10.30 மணிக்கு ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார்.

அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுளினார். மாலை 3 மணி முதல் மாலை 3.30 வரை அலங்காரம் அமுது கண்டருளினார். பின்னர் மாலை 6 மணி வரை பொது ஜன சேவை நடைபெற்றது. அங்கிருந்து மாலை 6.15 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

உறியடி உற்சவம்

உறியடி உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெறுகிறது. சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளி காலை 9 மணிக்கு கிருஷ்ணன் சன்னதிக்கு வருவார். பின்னர் மாலை 3 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் திருச்சிவிகையில் மற்றும் கிருஷ்ணன் உடன் புறப்பட்டு அம்மாமண்டபம் சாலையில் உள்ள யாதவ உறியடி ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4 மணிக்கு வந்து சேர்கிறார்.

பின்னர் இரவு 7 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வருகிறார். இரவு 8.15 மணியளவில் பாதாள கிருஷ்ணர் சன்னதி அருகில் உறியடி உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com