உத்தரபிரதேச பா.ஜ.க. அரசை பசுமாடே முட்டி தள்ளிவிடும் கி.வீரமணி சாடல்

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. அரசை பசுமாடே முட்டி தள்ளிவிடும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச பா.ஜ.க. அரசை பசுமாடே முட்டி தள்ளிவிடும் கி.வீரமணி சாடல்
Published on

சென்னை,

பா.ஜ.க. ஆட்சியில் குறிப்பாக உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பசு மாட்டுக்கு தரப்படும் பாதுகாப்பும், பராமரிப்பும் ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்கு தரப்படுவதில்லை என்பது மறுக்கப்படாத உண்மை.

கோமாதா குலமாதா' என்று கும்பிடும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜெண்டாவின் அரங்கேற்றமே பசு பாதுகாப்பு சட்டம், மாட்டிறைச்சி என்ற சத்துணவு தடை சட்டம். வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக குஜராத்தில் மாட்டிறைச்சி அதிகமான அளவுக்கு ஏற்றுமதி உண்டு. பா.ஜ.க. இதுபற்றி மூச்சுவிடுவதில்லை. காரணம் மாட்டிறைச்சிக்கு தடை போட முடியாத அளவுக்கு அங்கே அது மக்களின் உணவு.

உத்தரபிரதேசத்தில் பசுமாட்டால், இந்துத்துவா மூலம் ஆட்சிக்கு வந்தவர்களை அதே பசுமாடுதான் ஆட்சியில் இருந்து வீட்டுக்கு அனுப்பவும் ஆயத்தமாகி வருகிறது என்பது உத்தரபிரதேச தேர்தலில் அவர்களுக்கு வயிற்றை கலக்குகிறது அல்லவா?.

பசுமாடு முட்டி தள்ளிவிடும்

உத்தரபிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்கும் மையங்களில் 8 லட்சம் பசுக்கள் உள்ளன.

உத்தரபிரதேச ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் குழந்தைகள் இறந்த கொடுமை, கொரோனா காலத்தில் கங்கையில் மிதந்த மனிதர்களின் பிணங்கள், புலம் பெயர்ந்த தொழிலாளிகள், வேலை கிடைக்காத இளைஞர்கள் பெருக்கம் ஆகியவை பற்றி அங்குள்ள ஆட்சி கவலைப்படவே இல்லை.

விவிலியத்தில் ஒரு வாக்கியம் உண்டு. ஆயுதம் எடுப்பவன் அதனாலேயே முடிவை சந்திப்பான் என்பது போன்று, பசு மாடு உத்தரபிரதேச பா.ஜ.க. அரசை முட்டி தள்ளிவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு வந்து தவிக்கும் பரிதாபம், என்ன ஒரு வேடிக்கை.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com