கோத்தகிரி அருகே ஆர்ப்பரித்து கொட்டும் உயிலட்டி நீர்வீழ்ச்சி: விவசாயிகள் மகிழ்ச்சி

அருவி நீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோத்தகிரி அருகே ஆர்ப்பரித்து கொட்டும் உயிலட்டி நீர்வீழ்ச்சி: விவசாயிகள் மகிழ்ச்சி
Published on: 

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உயிலட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உயிலட்டி நீர்வீழ்ச்சி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கூக்கல்தொரை செல்லும் சாலையில் உயிலட்டி கிராமப்பகுதியில் நீர் வீழ்ச்சி ஒன்று அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி தண்ணீரை நம்பி, உயிலட்டி, கூக்கல் தொரை, மசக்கல் கிராமங்களில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால், நீர்வீழ்ச்சி வறண்டு நீர்வரத்து குறைந்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. எனவே பணம் கொடுத்து லாரிகள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து பயிர்களுக்கு பாய்ச்ச வேண்டிய சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கோத்தகிரி பகுதியில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதன் காரணமாக இந்த நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உயிலட்டி நீர் வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் கொட்டும் வெள்ளம், காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. இந்த காட்சியை காண சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் சென்று தொலைவில் இருந்து கண்டுகளித்து, ஆர் வத்துடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். மேலும் இந்த அருவி நீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com