விவசாய இடுபொருட்கள் இருப்பை உழவன் செயலியில் அறிந்து கொள்ளலாம்

விவசாய இடுபொருட்கள் இருப்பை உழவன் செயலியில் அறிந்து கொள்ளலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் கூறியுள்ளார். இது குறித்து திருவாரூர் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) லெட்சுமிகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
விவசாய இடுபொருட்கள் இருப்பை உழவன் செயலியில் அறிந்து கொள்ளலாம்
Published on

திருவாரூர்;

விவசாய இடுபொருட்கள் இருப்பை உழவன் செயலியில் அறிந்து கொள்ளலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் கூறியுள்ளார்.இது குறித்து திருவாரூர் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) லெட்சுமிகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உழவன் செயலி

வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகள் வழியாக செயல்படுத்தும் மானிய திட்டங்களை பற்றிய தகவல்கள் உழவன் செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு உழவர் நலத்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து இடுபொருட்களை பற்றியும் தொந்து கொள்ளவதோடு பதிவு செய்து கொள்ளலாம். தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் உள்ள உரங்களின் இருப்பு, விலை பற்றிய விவரங்கள், வேளாண் பொறியியல் துறை மற்றும் விவசாயிகளிடம் வாடகைக்கு உள்ள எந்திரங்கள், வாடகை முன்பதிவு பற்றிய விவரங்கள் ஆகியவற்றை உழவன் செயலியில் அறிந்துகொள்ளலாம்.

சாகுபடி நிலம்

உழவன் செயலியில் வானிலை அறிவிப்பு மாவட்டம் வாரியாக தமிழ் மொழியில் வழங்கப்படும். தமிழகத்தின் முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் மேட்டூர் அணை நீர்த்தேக்கத்துக்கு ஆதாரமாக விளங்கும் கர்நாடகாவில் உள்ள 4 முக்கிய அணைகளின் தினசரி நீர் அளவு ஆகியவையும் தெரிந்து கொள்ளலாம்.விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மற்றும் தேவை விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான விவரங்கள், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள் தங்கள் தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்ற பதிவு செய்து கொள்வதற்கான வழிமுறை போன்றவற்றை உழவன் செயலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com