மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற வாகை சந்திரசேகர்

சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து சமரசமின்றி குரல் கொடுத்து வரும் கழக தலைமைகளுக்கு கிறித்தவ அமைப்புகளின் சார்பில் பி.வில்சன் நன்றி தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற வாகை சந்திரசேகர்
வாகை சந்திரசேகர்
Published on

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து நேரில் சந்தித்து வாழ்த்துகளையும், நன்றியையும் பரிமாறி கொண்டனர். இதனால் இன்று காலை முதலே பரபரப்புடன் காணப்பட்டது.

தேசிய விருது

இயல் இசை நாடக மன்றத்தின் முன்னாள் தலைவருமான பிரபல நடிகர் வாகை சந்திரசேகர், கலை துறையில் ஆற்றிய சாதனைக்காக அண்மையில் இந்திய குடியரசு தலைவரிடமிருந்து உயரிய 'சங்கீத நாடக அகாடமி' (அகாதெமி புரஸ்கார்) தேசிய விருதை பெற்றார்.

ஸ்டாலின் வாழ்த்து

இந்த நிலையில், இன்று அவர் தனது டெல்லி பயணத்தை முடித்து கொண்டு, பெற்ற விருதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். வாகை சந்திரசேகரின் சாதனையை பாராட்டி மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

பி.வில்சன் எம்பி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்
பி.வில்சன் எம்பி

பி.வில்சன் எம்பி

இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் எம்பி திமுக தலைவரை சந்தித்து பேசினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதி பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மிக வலுவான குரல் எழுப்பி வருகிறார்.

கிறித்தவ அமைப்புகளின் சார்பில் நன்றி

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பின் காரணமாக, இந்த மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவின் தீவிர பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திருப்பத்தை அடுத்து, சிறுபான்மையினர் கூட்டு நடவடிக்கை மன்றத்தின் தலைவர் என்ற முறையில், சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து சமரசமின்றி குரல் கொடுத்து வரும் கழக தலைமைகளுக்கு கிறித்தவ அமைப்புகளின் சார்பில் நன்றி தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com