

நரிக்குடி யூனியன் உதவி என்ஜினீயராக பணியாற்றி வந்த பெரோஸ் கான் மாவட்ட நிர்வாகத்தால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் அவரை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அவரை ராஜபாளையம் யூனியன் உதவி என்ஜினீயராக பணி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.