15-18 வயது வரையிலான மாணவர்களுக்கு ஜன.3 ஆம் தேதி முதல் தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் வேகமாக பரவும் நோய் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
15-18 வயது வரையிலான மாணவர்களுக்கு ஜன.3 ஆம் தேதி முதல் தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை,

சென்னையில் இன்று காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடு முழுவதுமே கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னையிலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் 194 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், சென்னை அசோக் நகர், எல்.ஜி.ஜி.எஸ் காலனி 19வது தெருவில் உள்ள இரண்டு வீட்டில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதி தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் அனைவருமே முகக்கவசம் அணியவும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் ஒமைக்ரான் பாதித்த 45 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அனைவருமே அறிகுறிகள் அற்ற பாதிப்புடன் உள்ளனர். இவர்களைத் தவிர 120 பேருக்கு எஸ் ஜீன் குறைபாடு கண்டறியப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வேகமாகப் பரவும் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 15 முதல்18 வயது வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வரும் 3ஆம் தேதி சென்னை போரூர் பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். மேலும், மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com