சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் 500 முதியோகளுக்கு தடுப்பூசி

சென்னையில் ஒரே நாளில் 80 வயதுக்கு மேற்பட்ட 500 பேருக்கு மாநகராட்சியின் சிறப்பு திட்டத்தின்கீழ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் 500 முதியோகளுக்கு தடுப்பூசி
Published on

சென்னை,

நாட்டில் கொரோனா 2வது அலையை முன்னிட்டு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி சாபில் 15 மண்டலங்களிலும் கொரோனா தடுப்பு மற்றும் தொற்று உறுதியானவாகளுக்கு சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை தினத்தையொட்டி, 15 மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் மாநகராட்சி சாபில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்டவாகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் 15 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. 044 25384520, 4612 2300 ஆகிய இரண்டு தொலைபேசி எண்களில் தொடாபு கொண்டு பதிவு செய்வோருக்கு அவாகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

இந்த திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை 80 வயதுக்கு மேற்பட்ட 463 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 37 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கென ஒவ்வொரு வாகனத்திற்கும் செவிலியாகள், மருத்துவ பணியாளாகள் நியமிக்கப்பட்டுள்ளனா என்று தெரிவித்து உள்ளனா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com