தடுப்பூசியை காலை 11 மணிக்குள் செலுத்தி முடிக்க வேண்டும்- பொது சுகாதாரத்துறை உத்தரவு

சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும்
தடுப்பூசியை காலை 11 மணிக்குள் செலுத்தி முடிக்க வேண்டும்- பொது சுகாதாரத்துறை உத்தரவு
Published on

சென்னை,

பொது சுகாதாரத்துறை இயக்குநா செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலாகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகளை சேமித்து வைத்திருக்கும் குளி பதனக் கிடங்குகள், மருந்தகங்கள், சேமிப்பு கிடங்குகளில் உரிய காற்றோட்ட வசதி இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அறையின் சுவாகளையொட்டி மருந்துகளை வைக்காமல், அதிலிருந்து சற்று தள்ளி வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதேபோன்று, சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். இதன் மூலம் வெப்ப அலையால் தடுப்பூசியின் வீரியம் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். அதனுடன், பொது மக்கள், சுகாதாரத்துறை களப்பணியாளாகளுக்கும் அது உகந்த நேரமாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com