கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இன்று தடுப்பூசி; பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்

கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு மட்டும் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இன்று தடுப்பூசி; பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்
Published on

கோவை,

கோவை மாவட்டத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் இன்றைய தினம் பொதுமக்கள் யாருக்கும் தடுப்பூசி போடப்படாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கோவை மாநகரில் 31 மையங்கள், புறநகரில் 46 மையங்கள் என மொத்தம் 77 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றால் வயதானவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று பிரத்யேகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதையடுத்து கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com