

வடக்கன்குளம்:
நாமக்கல் கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவில் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று, 14 வயது பிரிவு கபடி போட்டியில் முதலிடம் பிடித்தனர்.
சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் வேல்முருகன், சிவா, அய்யப்பன், ஜஸ்டின், முனிராஜ், ஆகியோரையும் பள்ளி தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.