வடவூர்பட்டி பேச்சியம்மன் கோவில் வருசாபிஷேக விழா

வடவூர்பட்டி பேச்சியம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.
வடவூர்பட்டி பேச்சியம்மன் கோவில் வருசாபிஷேக விழா
Published on

சேரன்மாதேவி:

பிராஞ்சேரி அருகே வடவூர்பட்டியில் உள்ள பேச்சியம்மன் உடனுறை துர்க்கை அம்மன் கோவிலில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜகள் நடைபெற்றது. இதையடுத்து 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலையில் திருவிளக்கு பூஜை, பொங்கலிட்டு வழிபடுதல், இரவில் அம்மனுக்கு படையல் பூஜை ஆகியவை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com