48- வது பிறந்தநாளை கொண்டாடிய வைகை எக்ஸ்பிரஸ்


48- வது பிறந்தநாளை கொண்டாடிய வைகை எக்ஸ்பிரஸ்
x
தினத்தந்தி 15 Aug 2025 2:35 PM IST (Updated: 15 Aug 2025 4:37 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே ஊழியர்களை பாராட்டி நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

மதுரை,

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. கடந்த 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

மதுரையிலிருந்து காலை 6.40 மணிக்கு இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு, பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். சென்னையிலிருந்து (12635) பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரை வந்தடையும்.

இந்தநிலையில் வைகை எக்ஸ்பிரஸ் 48-வது பிறந்தநாள் விழா , மதுரை ரெயில் நிலைய 4வது நடைமேடையில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜின் முன்பாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது..ரெயில்வே ஊழியர்களை பாராட்டி நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.



1 More update

Next Story