வைகாசி தேரோட்ட திருவிழா

வைகாசி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வைகாசி தேரோட்ட திருவிழா
Published on

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே தேவதானத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. ஆகாயதலமாக விளங்கும் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று வைகாசி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு அபிஷேகங்களுடன் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார், செயல் அலுவலர் கலாராணி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com