வைகாசி மாத பூஜை; சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு

முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வைகாசி மாத பூஜை; சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தில் 5 நாட்கள் மற்றும் விசேஷ நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படுகிறது.

தொடர்ந்து 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com