இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு வைகோ பிறந்தநாள் வாழ்த்து

இந்திய நாட்டினுடைய தலைமை அமைச்சராக பொறுப்பேற்பதற்கு இயற்கை தாயினுடைய அருளை வேண்டுகிறேன் என வைகோ தெரிவித்தார்.
ராகுல்காந்தி,வைகோ
Published on

சென்னை,

ராகுல்காந்திக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இயற்கை தாயினுடைய அருள்

அன்பு சகோதரர் ராகுல்காந்திக்கு எனது இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். அரசியலில் நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெற்று இந்திய நாட்டினுடைய தலைமை மந்திரியாக பொறுப்பேற்பதற்கு இயற்கை தாயினுடைய அருளை வேண்டுகிறேன்.

வாழ்த்து

அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என்பதை தெரிவித்து, இந்த நாள் இன்னும் பன்னூறு முறை வரட்டும் என வாழ்த்துகிறேன் என கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அலைபேசி மூலம் வாழ்த்தினார்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வாழ்த்தியத்திற்கு ராகுல்காந்தி வைகோவுக்கு நன்றி தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com