வைகோ மிகப்பெரிய தவறை செய்திருக்கிறார்- மல்லை சத்யா பேட்டி


வைகோ மிகப்பெரிய தவறை செய்திருக்கிறார்- மல்லை சத்யா பேட்டி
x

என் மீது சுமத்தியிருக்கின்ற குற்றச்சாட்டு அபாண்டமான குற்றச்சாட்டு என்று மல்லை சத்யா கூறியுள்ளார்.

சென்னை,

மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில், மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

என் மீது சுமத்தியிருக்கின்ற குற்றச்சாட்டு அபாண்டமான குற்றச்சாட்டு. எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகப் பண்பு கொண்ட தலைவர் வைகோவின் வாயில் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கக் கூடாது என்பது நாட்டு மக்களின் கருத்தாக உள்ளது. என்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன். 32 ஆண்டுகளில் ஒருநாளும் என் காரில் கொடி இல்லாமல் பயணம் செய்ததில்லை. ஆனால் பழி சொன்ன நாளிலேயே கொடியையும் அகற்றிவிட்டேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.. அல்ல அல்ல.. ‘மகன் திமுக'வில் இருந்து நாங்கள் விடுதலை பெற்றிருக்கிறோம் என்றுதான் பார்க்கிறேன். இனிமேல் நாங்கள் சுதந்திர மனிதனாக செயல்பட முடியும் என்றார்.

1 More update

Next Story