ஓய்வறியாமல் தமிழக மக்களுக்காக வைகோ உழைத்து வருகிறார் - சபாநாயகர் அப்பாவு

ஓய்வறியாமல் தமிழக மக்களுக்காக வைகோ உழைத்து வருகிறார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ஓய்வறியாமல் தமிழக மக்களுக்காக வைகோ உழைத்து வருகிறார் - சபாநாயகர் அப்பாவு
Published on

நெல்லை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குறித்து 'மாமனிதர் வைகோ'' என்ற தலைப்பில் ஆவணப்படம் தயார் செய்யப்பட்டு உள்ளது. தலைமை நிலைய செலாளர் துரை வைகோவின் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் நெல்லை உடையார்பட்டி முத்துராம் தியேட்டரில் இன்று திரையிடப்பட்டது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

வைகோ மிகப்பெரிய போராளி, ஓய்வறியாமல் தமிழக மக்களுக்காக உழைத்து வருகிறார். சவால்களை முறியடித்து தலை நிமிர்ந்து நிற்கும் அரசியல்வாதி அவர். 56 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை ஆவணபடமாக்கி உள்ளனர். இந்த படத்தை தயாரித்துள்ள ம.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com