இன்று மாலை வீடு திரும்புகிறார் வைகோ

அப்பல்லோ மருத்துவமனையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று மாலை வீடு திரும்புகிறார் வைகோ
Published on

சென்னை,

தோள்பட்டை எலும்பு முறிவுக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது குணமடைந்து வருகிறார்.

மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு பின் வைகோவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.இந்த நிலையில், தொடர்ந்து 7 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோ இன்று மாலை வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com