தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்தில் லஞ்சம் கேட்பதால், தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டதாக வைகோ தெரிவித்தார்.
தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன வைகோ குற்றச்சாட்டு
Published on

தாம்பரம்,

பல்லாவரத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்

அப்போது அவர் கூறியதாவது:-

காவல்நாயகன்

உலகில் 2-வது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் பிரதமரின் பேச்சு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அவரை எதிர்ப்பவர்கள் இந்து பயங்கரவாதிகள் என்று சொல்கிறார். இந்துக்களுக்கு இவர் தான் காவல்நாயகன் போல பேசுகிறார். நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம்.

ஆனால் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற அச்சத்தில் பாசிஸ்டுகள் என்ன செய்வார்களோ? அதை இந்தியாவில் மோடி செய்கிறார். இந்துக்களை பயங்கரவாதிகள் என்று நாங்கள் சொல்லவில்லை. பொய் சொல்கிறார் மோடி. எந்த கட்சியும் அந்த கருத்தை சொன்னதே கிடையாது.

தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்கள் தமிழக அரசு கேட்ட லஞ்சப்பணம் காரணமாக வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன.

இவ்வாறு வைகோ கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ., பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மகேந்திரன், குரோம்பேட்டை நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பழவந்தாங்கல்

இதேபோல பழவந்தாங்கல்லில் நடந்த பிரசார கூட்டத்திலும் வைகோ பேசினார். இதில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com