வைகோவின் சமத்துவ நடைபயணம் இன்றுடன் நிறைவு


வைகோவின் சமத்துவ நடைபயணம் இன்றுடன் நிறைவு
x

ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பதில் உடன்பாடில்லை என வைகோ கூறினார்.

மதுரை,

போதைப்பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 2-ந்தேதி சமத்துவ நடைபயணத்தை திருச்சியில் தொடங்கினார். நடைபயணத்தின் நிறைவு விழா இன்று (திங்கட்கிழமை) மாலை மதுரையில் நடக்கிறது. இதற்கிடையே, உத்தங்குடி பகுதியில் நேற்று இரவு வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

"வருகிற தேர்தலில் தி.மு.க. தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து, மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக தமிழகத்தை வழிநடத்துவார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அதனால், கூட்டணியிலும் பங்கு, ஆட்சியிலும் பங்கு என பேசுகிறார்கள். ஆனால், அந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. நாங்கள் அந்த மாதிரியான நிபந்தனைகளை முன்வைக்கவில்லை, வைக்கப்போவதும் இல்லை. கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கிய பின்னர் எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை அறிவிப்போம்."

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story