

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பகவான் வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு வரும் 4.3.2026 (புதன்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.
4.3.2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, மார்ச் மாதத்தின் முதல் சனிக்கிழமையான 7.3.2026 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும்.
கருவூலச் செயல்பாடுகள்: இந்த உள்ளூர் விடுமுறை ‘செலவாணி முறிச் சட்டம் 1881’ (Negotiable Instruments Act 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை. எனவே மாவட்டத் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு சார்ந்த அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.