‘ஊசியில் ஒட்டகம் நுழையாது’ இந்தி திணிப்புக்கு வைரமுத்து எதிர்ப்பு

‘ஊசியில் ஒட்டகம் நுழையாது’ இந்தி திணிப்புக்கு வைரமுத்து எதிர்ப்பு.
‘ஊசியில் ஒட்டகம் நுழையாது’ இந்தி திணிப்புக்கு வைரமுத்து எதிர்ப்பு
Published on

சென்னை,

திரையுலகினர் மத்தியில் சமீப காலமாக இந்தி திணிப்பு குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே மத்திய மந்திரி அமித்ஷா இந்திக்கு ஆதரவாக சொன்ன கருத்து குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் கேட்டபோது, தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்றார்.

இந்தி நடிகர் அஜய்தேவ்கான் இந்திதான் தேசிய மொழி என்று சொன்ன கருத்துக்கும் திரையுலகினர் மத்தியில் கண்டனங்கள் கிளம்பின. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து ஜிப்மரில் இந்தி திணிப்பு நடப்பதாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், கடைசியில் இந்தி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது; வருந்துகிறோம். இந்தி படிப்போரை வெறுக்க மாட்டோம்; திணிப்போரை ரசிக்க மாட்டோம். ஒருமைப்பாடு சிறுமைப்படாதிருக்க நாட்டின் பன்மைக்கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும். சிலர் நுழைக்கப்பார்ப்பது ஊசியில் நூலன்று; ஒட்டகம் நுழையாது என்று குறிப்பிட்டு உள்ளார். வைரமுத்து கருத்தை வலைத்தளத்தில் பலர் வரவேற்று உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com