14-ம் தேதி காதலர் தினம்: படுஜோராக விற்பனையாகும் 'ஸ்டெம்பு ரோஸ்'

காதலர்கள் வழங்கும் பரிசுகளில் முதன்மையானதாக 'ஸ்டெம்பு ரோஸ்' இடம்பெறுகிறது.
14-ம் தேதி காதலர் தினம்: படுஜோராக விற்பனையாகும்  'ஸ்டெம்பு ரோஸ்'
Published on

ஆரல்வாய்மொழி,

உலக காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந்தேதி கொண்டாப்படுகிறது. அந்த தினம் வர இன்னும் 3 நாட்களே உள்ளது. பொதுவாக காதலர் தினத்தன்று ஒவ்வொரு காதலர்களும் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் வாழ்த்து அட்டை, நினைவு பரிசுகளை பரிமாறிக்கொள்வார்கள். இதில் காதலர்கள் வழங்கும் பரிசுகளில் முதன்மையானதாக 'ஸ்டெம்பு ரோஸ்' இடம்பெறுகிறது.

இந்த அழகான பூவுக்கு இப்போதே கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதாவது தோவாளையில் உள்ள பூமார்க்கெட்டில் 'ஸ்டெம்பு ரோஸ்' 20 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு வழக்கமாக ரூ.250-ல் இருந்து ரூ.300 வரை விற்பனையாகும். ஆனால் கடந்த 3 நாட்களாக ஒரு கட்டு ஸ்டெம்பு ரோஸ் ரூ.750-க்கு விற்பனையாகி உள்ளது.

இதுகுறித்து பூ வியாபாரி கிருஷ்ணகுமார் கூறுகையில், காத லர் தினத்தையொட்டி ஸ்டெம்பு ரோஸ் விற்பனை களைகட்டி உள்ளது. இதற்காக பல வண்ணங்களில் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. முதல் தரம் 'ஸ்டெம்பு ரோஸ்' ஒரு கட்டு ரூ.1,200 வரையும், 2-வது தரம் ஒரு கட்டு ரூ.750 முதல் ரூ.800 வரையும் விற்பனையாகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com