வள்ளலார் வழி நின்று பசியில்லா மாநிலமாக மாற்ற வேண்டும்-கலெக்டர் செந்தில்ராஜ் பேச்சு

‘வள்ளலார் வழி நின்று தமிழ்நாட்டை பசியில்லா மாநிலமாக மாற்ற வேண்டும்’ என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.
வள்ளலார் வழி நின்று பசியில்லா மாநிலமாக மாற்ற வேண்டும்-கலெக்டர் செந்தில்ராஜ் பேச்சு
Published on

'வள்ளலார் வழி நின்று தமிழ்நாட்டை பசியில்லா மாநிலமாக மாற்ற வேண்டும்' என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

வள்ளலார் விழா

தூத்துக்குடி மாநகராட்சி திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார்-200 முப்பெரும் விழா நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:-

வள்ளலார் 200 முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் பணிகள் முடிவடைந்த பிறகு திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் கோவிலை தமிழ்நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு இருக்கும். வள்ளலார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறினார். வடலூரில் அவர் ஏற்றிய அணையா விளக்கு சுனாமி மற்றும் கொரோனா காலங்களிலும் அணையவில்லை. வள்ளலார் காட்டிய, பசியோடு இருக்கும் ஒருவருக்கு பசியாற்ற வேண்டும் என்ற வழியில் அனைவரும் செல்ல வேண்டும். உடலை வருத்தி விரதம் இருப்பதை விட பசியால் இருப்பவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை செயலாற்றி வருகிறது. வள்ளலார் வழி நின்று நாம் பசியில்லா மாநிலமாக நமது மாநிலத்தை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அ.பிரம்மசக்தி, தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ம.அன்புமணி, மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, அருள்நந்திசிவம், கோபாலகிருஷ்ணன், ஜெயபால், தெய்வநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com