ரூ.80 கோடியில் வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணி 90 சதவீதம் நிறைவு; அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது

சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
ரூ.80 கோடியில் வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணி 90 சதவீதம் நிறைவு; அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது
Published on

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்பு பணிகள் ரூ.80 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாடிப்பகுதி, கிழக்கு பகுதி கேலரி பணிகள் ஏற்கனவே முடிவுற்ற நிலையில், மீதமுள்ள கலையரங்கம், ஸ்தபதி பணிகள்,கலையரங்கம் சுற்றி பேவர் பிளாக் தரை, நீரூற்று, குறள் மணிமாடம் பணிகள், திருக்குறள் அவையரங்கம், சுற்றுச் சுவர்,தெற்கு நுழைவாயில், புல்தரை அமைத்தல், தீ தடுப்பு வசதி, பெயர் பலகை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்திடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் வள்ளுவர் கோட்டம் அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயலாளர் ஜெயகாந்தன் ஐஏஎஸ், முதன்மை தலைமை பொறியாளர் மணிவண்ணன் , தலைமை பொறியாளர் மணிகண்டன், கண்காணிப்பு பொறியாளர் ஜெய்கர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com