வால்பாறை: வாக்களிக்கும் விழிப்புணர்வு சின்னமாக மாறிய கோடை விழா சின்னம்

கோடை விழா சின்னமான இருவாச்சி பறவை உருவம் வால்பாறை தாலுகா அலுவலகத்தில் நிறுவப்பட்டு உள்ளது.
வால்பாறை: வாக்களிக்கும் விழிப்புணர்வு சின்னமாக மாறிய கோடை விழா சின்னம்
Published on

வால்பாறை,

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையின் அரிய வகை பறவை இனங்களில் இருவாச்சி பறவையும் ஒன்று. கோடை விழா சின்னமான இருவாச்சி பறவை உருவம் வால்பாறை தாலுகா அலுவலகத்தில் நிறுவப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 'என் வாக்கு என் உரிமை' என்பதையும் வலியுறுத்தி அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருவாச்சி பறவை உருவத்தை வாக்கு வீரன் என்ற பெயரில் தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் வைத்துள்ளனர். இந்த தேர்தல் விழிப்புணர்வு பொம்மை அனைவரையும் கவர்ந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com