

ராமநாதபுரம்,
தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியை சேர்ந்த 20 பேர் ஒரு வேனில் ராமேசுவரம் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வந்த வேன் உச்சிப்புளி என்ற இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோத்தில் இருந்த பனை மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் நவநீதன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.