மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; சிறுவன் பலி

விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் சிறுவன் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; சிறுவன் பலி
Published on

வேன் மாதல்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா கத்தலூர் கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் பாஸ்கரன் (வயது 16). இவர், நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வலையாக சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கத்தலூர் அருகே வந்த போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக பாஸ்கரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சிறுவன் பலி

இதில் படுகாயமடைந்த பாஸ்கரனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com