வேன் கவிழ்ந்து விபத்து

திருவண்ணாமலை அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேன் கவிழ்ந்து விபத்து
Published on

திருவண்ணாமலை அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேன் கவிழ்ந்தது

வந்தவாசியை சேர்ந்த ஏழுமலை என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 20 பேருடன் வேனில் வந்தவாசியில் இருந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருந்தார்.

வேன் திருவண்ணாமலை அருகில் உள்ள கிளியாப்பட்டு கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே குழந்தை ஒன்று வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் குழந்தை மீது வாகனத்தை ஏற்றாமல் இருக்கும் வகையில் வாகனத்தை திருப்பும் பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

10 பேர் படுகாயம்

இதில் வேனில் பயணித்த 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீசார் மற்றும் அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேன் கவிழ்ந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com