கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி - 21 பேர் காயம்

கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் ஒருவர் உயிரிழந்தார்.
கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி - 21 பேர் காயம்
Published on

கொடைக்கானல்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். மதுரை-ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு கொடைக்கானல் வந்தனர். அங்கு சுற்றுலா இடங்களை கண்டு ரசித்த பின்னர் பழனி கேவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி பழனி மலைச்சாலை வழியாக வேன் சென்று கெண்டிருந்தது. 5-வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த மன்னார்குடியைச் சேர்ந்த முகேஸ்வரன் (15), திவ்யா (29), தன்சிகா (4), கவுரி (18), காயத்ரி (21), பாரதி செல்வன் (15), ஓட்டுநர் இளம்பரிதி (25) உட்பட 21 பேர் பலத்த காயமடைந்தனர்.

வாகனம் விபத்துக்குள்ளானதை அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி 21 பேரையும் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் தஞ்சாவூரை சேர்ந்த மாரியம்மாள் (வயது45) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com