படப்பை அருகே வேன் கவிழ்ந்து முதியவர் பலி

படப்பை அருகே வேன் கவிழ்ந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
படப்பை அருகே வேன் கவிழ்ந்து முதியவர் பலி
Published on

வேன் கவிழ்ந்தது

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு கிராமத்திற்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேன் நாட்டரசன்பட்டு சிறுவஞ்சூர் ஏரிக்கரை இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அதே சாலையில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் செல்ல வேன் ஒதுங்கிய போது ஏரிக்கரை சாலையில் இருந்து வேன் திடீரென நிலை தடுமாறி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

சாவு

இதில் வேனில் இருந்த நாட்டரன்பட்டு வடமேல்பாக்கம் மேட்டுத் தெருவை சேர்ந்த மாயன் (வயது 65) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் விசாரணை செய்து அவரது உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com