சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து - 20 பேர் படுகாயம்


சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து - 20 பேர் படுகாயம்
x

டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

விருதுநகர்,

கோவில்பட்டி அடுத்த கழுகுமலை வடக்கு அழகு நாச்சியாபுரம் பகுதியை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட பக்தர்கள், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வேனில் வந்துள்ளனர். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக வேனின் டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story