வாணாபுரம் தாலுகா வரைபடம் வெளியீடு

வாணாபுரம் தாலுகா வரைபடம் வெளியீடு
வாணாபுரம் தாலுகா வரைபடம் வெளியீடு
Published on

வாணாபுரம் 

ரிஷிவந்தியம் தொகுதியில் உள்ள கிராமங்கள் திருக்கோவிலூர் மற்றும் சங்கராபுரம் தாலுகாவின் கீழ் வந்ததால் ரிஷிவந்தியம் தொகுதிக்கு என தனி தாலுகா வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அதன்படி கடந்த ஆண்டு தொகுதியின் மையப்பகுதியில் வாணாபுரம் தாலுகா உருவாக்கப்படும் என தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் கள்ளக்குறிச்சி அரசு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாணாபுரம் தாலுகாவை தொடங்கி வைத்தார். இதில் சங்கராபுரம் தாலுகாவிலிருந்து அரியலூர், வடபொன்பரப்பி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர் தாலுகாவில் இருந்து மணலூர்பேட்டை ஆகிய குறுவட்டங்களை சேர்ந்த 85 கிராமங்களை உள்ளடக்கி வாணாபுரம் தாலுகா உருவாக்கப்பட்டது. வாணாபுரத்தில் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார சேவை மைய கட்டிடத்தில் தாசில்தார் குமரன் தலைமையில் வாணாபுரம் தாலுகா அலுவலகம் தற்காலிகமாக செயல்பட தொடங்கியது. தற்பொழுது தாலுகாவின் வரைபடம் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com