

பின்னர் அவர் இரவில் கோவையில் இருந்து சொகுசு காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை அவரே ஓட்டினார். கார் இரவு 11.30 மணி அளவில் சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. பாலத்தில் உள்ள ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி, தாறுமாறாக ஓடி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் காரில் இருந்த ஆதர்சை அவர்கள் மீட்டனர். காரில் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் பற்றி கேள்விப்பட்டு அங்கு வந்த பா.ஜனதா நிர்வாகிகள், ஆதர்ஷை பாதுகாப்பாக வேறு ஒரு காரில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.