வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 16-ம் தேதி செயல்படும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும்.
வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 16-ம் தேதி செயல்படும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு
Published on

வண்டலூர்,

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். இதற்கிடையில், வருகின்ற 16-ம் தேதி செவ்வாய்கிழமை அன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால், வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com