வண்டலூர் உயிரியல் பூங்கா 31-ந்தேதி திறந்திருக்கும்

பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும்.
வண்டலூர் உயிரியல் பூங்கா 31-ந்தேதி திறந்திருக்கும்
Published on

வண்டலூர்,

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். இதற்கிடையில், வருகிற செவ்வாய்கிழமை (31-ந்தேதி) புத்தாண்டுக்கு முந்தைய தினம் என்பதாலும், அரையாண்டு விடுமுறை என்பதாலும், பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக வருகிற செவ்வாய்க்கிழமை திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com