வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் 2 நிமிடம் நின்று செல்லும்


வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் 2 நிமிடம் நின்று செல்லும்
x

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டது.

சென்னை,

சென்னை - நெல்லை இடையே 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரெயில், பயணிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்ற நிலையில், 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெட்டிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டது. ரெயில் பெட்டிகளும் ஆரஞ்சு நிறத்தில் புதிதாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் நாளை (வியாழக்கிழமை) முதல் கோவில்பட்டியில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எழும்பூர் - நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 20665, 20666) நாளை முதல் தற்காலிகமாக கோவில்பட்டியில் 2 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரும் ரெயில் இரவு 9.23 மணி முதல் 9.25 வரையும், நெல்லையில் இருந்து சென்னை வரும் ரெயில் காலை 6.38 முதல் 6.40 வரையும் 2 நிமிடங்கள் கோவில்பட்டியில் நிற்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story