விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை முந்திக்கொண்ட வந்தே மாதரம்

தமிழ்நாட்டின் 13வது முதல்-அமைச்சராக பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்.
விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை முந்திக்கொண்ட வந்தே மாதரம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பெரும்பான்மைக்கு 118 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதையடுத்து, காங்கிரஸ், இடதுசாரிகள் விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் 13 -வது முதல்-அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

அவருக்கு கவர்னர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து விஜய்யுடன் சேர்த்து 9 பேர் ஆனந்த், ஆதவ், அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

முன்னதாக விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்கும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடாமல் வந்தே மாதரம் தேசிய கீதம் பாடல் ஒலிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பெற்றது.

முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகள் வழக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com