மதுரையில் பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது

மதுரை, உசிலம்பட்டியை சேர்ந்த ஒருவர், தனது தந்தை பெயரில் உள்ள ஒரு நிலத்தை, வாரிசு அடிப்படையில் தனக்கும், தனது தாய், சகோதரி ஆகியோருக்கும் பட்டா மாற்றுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார்.
மதுரையில் பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது
Published on

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துராமன். இவருடைய தந்தை பெயரில் உள்ள ஒரு நிலத்தை, வாரிசு அடிப்படையில் தனக்கும், தனது தாய், சகோதரி ஆகியோருக்கும் பட்டா மாற்றுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ததாக தெரிகிறது.

ஆனால் பட்டா மாறுதல் செய்து தர முத்துராமனிடம், சம்பந்தப்பட்ட வேப்பனூத்து கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) சுப்பையா, ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை முத்துராமனிடம் கொடுத்து அனுப்பினர். சுப்பையா பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com